இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய ஆள்சேர்ப்பு வாரியம் (ICRB) விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அடுத்த மாதம் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மொத்தம் 526 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் உதவியாளர், ஜூனியர் பர்சனல் அசிஸ்டென்ட், மேல் பிரிவு கிளார்க், ஸ்டெனோ போன்ற பதவிகள் உள்ளன. எழுத்துத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மொத்தப் பணியிடங்கள்: 526
இதில் உதவியாளர் (LDC) 339, இளநிலை தனிப்பட்ட உதவியாளர் 154, UDC 16, ஸ்டெனோ 3 ஆகிய பணியிடங்கள் உள்ளன.
தகுதிகள்: 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேர்ச்சி, குறிப்பிட்ட வேகத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் மற்றும் 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100, SC, ST, PWD, பெண்களுக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி: ஜனவரி 9, 2023
இணையதளம்: apps.shar.gov.in