பொதுத்துறை நிறுவனமான நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (NHPC) டிரெய்னி இன்ஜினியர், டிரெய்னி ஆபீசர் ஆகிய பணிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. GATE – 2022, CLAT 2022 (PG), CA/CMA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த பணியிடங்கள்: 401
பணியிட விவரங்கள்:
பயிற்சி பொறியாளர் (சிவில்)- 136
பயிற்சி: பொறியாளர் (மின்சாரம்) – 41
பயிற்சி பொறியாளர் (மெக்கானிக்கல்) -108
பயிற்சி அதிகாரி (நிதி) – 99
பயிற்சி அதிகாரி (HR) – 14
பயிற்சி அதிகாரி (சட்டம்) – 3
தகுதி: GATE-2022, UGCNET டிசம்பர் 2021, ஜூன் 2022, CLAT 2022 (PG) மதிப்பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் B.Sc, BE, B.Tech, Degree, PG, CA, ICWA, CMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 25 ஜனவரி 2023 தேதியின்படி 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 50,000 – ரூ. 1,60,000.
விண்ணப்பம் தொடங்கும் தேதி : ஜனவரி 5, 2023.
கடைசி தேதி: ஜனவரி 25, 2023.
இணையதளம்: http://www.nhpcindia.com