ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை தேர்வு 2022க்கான அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மத்திய அரசுத் துறைகளில் உதவியாளர், எழுத்தர், டேட்டா என்ட்ரி ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது.
மொத்த பணியிடங்கள் – 4500
பணியிட விவரங்கள்:
- எழுத்தர் (LDC) / இளநிலை செயலக உதவியாளர் (JSA)
- அஞ்சல் உதவியாளர்
- டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
(விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் பொருந்தும்)
முக்கிய நாட்கள்:
விண்ணப்பம் தொடங்கும் தேதி: டிசம்பர் 6, 2022
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜனவரி 4, 2023.
நிலை – 1 எழுத்துத் தேர்வு (CBT) : பிப்ரவரி – மார்ச், 2023.
நிலை – 2 தேர்வு தேதி: விரைவில் அறிவிக்கப்படும்.
இணையதளம்: https://ssc.nic.in/
