நாடு முழுவதும் இந்திய தபால் நிலையங்களில் காலியாக உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது. எனவே இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பை படித்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள்: 12,828
பதவிகள்:
- கிளை போஸ்ட் மாஸ்டர்
- கிளை துணை போஸ்ட் மாஸ்டர்
வயது:
18 முதல் 40 வயதுக்கு இருக்க வேண்டும்.
தகுதி:
- குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி.
- ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி.
- உள்ளூர் மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
- கூடுதல் தகுதியாக கணினியறிவு, சைக்கிள் ஓட்டத் தெரிந்திக்க வேண்டும்.
சம்பளம்:
கிளை போஸ்ட் மாஸ்டர் – 12,000
உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் – 10,000
விண்ணப்பம்:
இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே https://indiapostgdsonline.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி: 11.06.2023
மேலும் கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பைக் காணவும்.
விண்ணப்பிக்க: https://indiapostgdsonline.gov.in
அறிவிப்பு: https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_20052023_GDS_Eng.pdf
