அடி தூள்.. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1,025 வேலைகள்!!

 

பஞ்சாப் நேஷனல் வங்கி நாடு முழுவதும் உள்ள பல்வேறு கிளைகளில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 1025 பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டால் ரூ. 78 ஆயிரம் வரை சம்பளம் பெறலாம். விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பிப்ரவரி 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

 

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் முழுமையான தகவலுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.pnbindia.in/ ஐப் பார்க்கவும்.

இந்தப் பணிக்கான தகுதிகள் என்ன? வயது வரம்பு என்ன? தேர்வு செயல்முறை எப்படி உள்ளது? இப்போது அதன் விவரங்களை அறிந்து கொள்வோம்.

 

மொத்த பணியிடங்கள்: 1025

துறை வாரியான பணியிடங்கள்:

 

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் பதவிகளுக்கு ஏற்ப பிஇ/பிடெக், எம்இ/எம்டெக், எம்சிஏ, எம்பிஏ, சிஏ, ஐசிடபிள்யூஏ, சிஜிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்துடன் சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.01.2024 தேதியின்படி, அதிகாரி பணிகளுக்கு 21-28 வயதுக்குள்ளும், மேலாளர் பணிகளுக்கு 25-35 வயதுக்குள்ளும், மூத்த மேலாளர் பணிகளுக்கு 27-38 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம்:

இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு அதிகாரிக்கு மாதம் ரூ.36,000-ரூ.63,840, மேலாளருக்கு ரூ.48,170-ரூ.69,810 மற்றும் மூத்த மேலாளருக்கு ரூ.63,840-ரூ.78,230 வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்காணல், ஆவணச் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.59 செலுத்த வேண்டும். மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.1180 செலுத்த வேண்டும்.

ஆன்லைன் பதிவுகள் ஆரம்பம்:

07-02-2024

ஆன்லைன் பதிவுக்கான கடைசி தேதி:

25-02-2024

மேலும் கூடுதல் விவரங்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று பார்க்கவும்:
https://www.pnbindia.in/

 
Exit mobile version