வேலைவாய்ப்பு

ரூ.12,000/- சம்பளத்தில் தமிழக அரசு மருத்துவமனையில் வேலை!!

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Pharmacist, Lab Technician, Micro Radiators ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

நிறுவனம் – Thiruvallur Govt Hospital
பணியின் பெயர் – Pharmacist, Lab Technician, Micro Radiators
பணியிடங்கள் – 18
கடைசி தேதி – 25.08.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

காலிப்பணியிடங்கள்:

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் Pharmacist, Lab Technician, Micro Radiators பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 18 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

  • Pharmacist – D.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Lab Technician – DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Micro Radiators – பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் டிப்ளமோ/ டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சமாக ரூ.12,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 25.08.2021 அன்று மாலை 5 மணிக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

இதையும் படிங்க:  ரூ.2,60,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: