வேலைவாய்ப்பு

தமிழக அரசு கலெக்டர் ஆபீஸில் வேலை – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி!

கரூர்‌ மாவட்டத்தில்‌, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்‌ கீழ்‌ ஊராட்சி ஒன்றியங்களில்‌ உள்ள கிராம தொகுப்புகளுக்கு கீழ்காணும்‌ தகுதிகளின்‌ படி மாதம்‌ ரூ.2000/- மதிப்பூதியத்தில்‌ 16 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள்‌ தேர்வு செய்யப்படவுள்ளனர்‌. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
பணியின் பெயர் – சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்
பணியிடங்கள் – 16
விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.08.2021
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள்:

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மொத்தம் 16 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பிக்கும்‌ நாளில்‌ 35 வயதுக்கு கீழ்‌ இருத்தல்‌ வேண்டும்‌. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

கல்வி தகுதி:

  • 12-வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.
  • நன்றாக எழுத படிக்க மற்றும்‌ கணக்கிடும்‌ திறன்‌ உடையவர்களாக இருத்தல்‌ வேண்டும்‌.
  • கணினிதிறன்‌ உடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌.
  • கைபேசி வைத்திருப்பவர்களாகவும்‌, அதை இயக்கி குறுந்தகவல்‌ அனுப்பவும்‌ & பெறவும்‌ திறனுடையவர்களாகவும்‌ இருத்தல்‌ அவசியம்‌.

தேவையான தகுதிகள்‌ :

  • ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச்‌ சார்ந்த மகளிர்‌ சுயஉதவிக்‌ குழு உறுப்பினராக இருத்தல்‌ வேண்டும்‌.
  • தேர்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்‌ அதே தொகுப்பைச்‌ சார்ந்தவராக இருத்தல்‌ அவசியம்‌.
  • மக்கள்‌ நிலை ஆய்வால்‌ கண்டறியப்பட்ட உறுப்பினராக (612 14௦) இருத்தல்‌ வேண்டும்‌.
  • நல்ல தகவல்‌ தொடர்புதிறன்‌ உடையவர்களாக இருத்தல்‌ வேண்டும்‌. கிராமத்திலிருந்து அருகாமையிலுள்ள வங்கிகளுக்குச்‌ செல்ல விருப்பம்‌ உள்ளவர்களாக இருத்தல்‌ அவசியம்‌.
  • நீண்ட காலகடன்‌ நிலுவை உள்ளவராக இருத்தல்கூடாது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்காணும்‌ தகுதியுள்ள சுயஉதவிக்குழு உறுப்பினர்கள்‌ தங்களது விண்ணப்பங்களை தாங்கள்‌ சார்ந்துள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலமாக 31.08.2021-க்குள்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ உள்ள திட்ட இயக்குநர்‌, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்‌, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அறை எண்‌.212-ல்‌ சமர்ப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌.த.பிரபுசங்கர்‌,இ. ஆ.ப., அவர்களால்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official PDF Notification – https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2021/08/2021082535.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  தேர்வு இல்லாமல்! காந்திகிராம பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள்!!
Back to top button
error: