வேலைவாய்ப்பு

நுகர்வோர் ஆணையத்தில் வேலை – தேர்வு கிடையாது!

தமிழ்நாடு மாநில நுகர்வோர் ஆணையத்தில் இருந்து Judicial Member மற்றும் Non-Judicial Member பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து 13.09.2021க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவைர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – தமிழ்நாடு மாநில நுகர்வோர் ஆணையம்
பணியின் பெயர் – Judicial & Non-Judicial Member
பணியிடங்கள் – 02
விண்ணப்பிக்க கடைசி தேதி – 13.09.2021
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள்:

Judicial Member – 01
Non-Judicial Member – 01
வயது வரம்பு:

01.07.2021 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Judicial member தகுதிகள்:

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 10 வருடங்கள் ஒரு மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை அதிகாரியாக அல்லது அதற்கு சமமான அளவில் எந்த நீதிமன்றத்திலும் அல்லது மாவட்ட நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தில் ஒருங்கிணைந்த சேவையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Non-Judicial memberதகுதிகள்:

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் திறன், நுகர்வோர் விவகாரங்கள், சட்டம், பொது விவகாரங்கள், நிர்வாகம், பொருளாதாரம் ஆகியவற்றில் இருபது வருடங்களுக்கு குறையாத சிறப்பு அறிவு மற்றும் தொழில் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாத சம்பளம்:

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு (மாநில ஆணையம் மற்றும் மாவட்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் சேவை நிபந்தனைகள்) விதிகள், 2021 ன் விதி 4 ன் படி, சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு ரூ.1,000/- விண்ணப்பகட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் “http://www.consumer.tn.gov.in” அல்லது https://www.scdrc.tn.gov.in அல்லது “https://www.mhc.tn” என்ற இணைய முகவரியில் இருந்து விண்ணப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து 13.09.2021 க்குள் The Registrar (Recruitment), Judicial Recruitment Cell, High Court of Madras, Chennai – 600 104” என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Official PDF Notification – https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_01_2021_cons.pdf

Application Form – https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_01_2021_appl.pdf

இதையும் படிங்க:  ரூ.40,500/- சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: