வேலைவாய்ப்பு

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய அரசின் கீழ் இயங்கும் அஞ்சல் துறையில் தற்போது காலியாக உள்ள 29 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கு வரும் டிசம்பர் 5ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த முழு விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

பணியிடங்கள்

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள உதவி மேலாளர் மற்றும் டெக்னிக்கல் சூப்பர்வைசர் பதவிக்கான 29 பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் அல்லது கல்வி நிறுவனத்தில் கணினி அறிவியல் துறையில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் டிப்ளமோ படித்துள்ளவர்களுக்கு 1 வருடம் பணி அனுபவம் அவசியம்.

வயது வரம்பு

அதிகபட்சமாக 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை

இந்த பணிக்கு எழுத்து தேர்வு மற்றும் டெபுடேஷன் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணிக்கு விண்ணப்பிக்க https://ccc.cept.gov.in/technicalpost என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Official Notification – https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_21102021_CEPT.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  NFL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
Back to top button
error: