தமிழ்நாடு

நகைக்கடைகள் இன்று மூடல் – புதிய ஹால்மார்க் விதி எதிர்ப்பு!!!

மத்திய அரசின் புதிய ஹால்மார்க் விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இன்று (ஆகஸ்ட் 23) காலை 9 மணி முதல் 11.30 வரை மூடப்படும் என நகை வணிகர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தர நிர்ணய ஆணையம் சார்பில் நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளில் விற்கப்படும் தங்க நகைகள் இனி புதிய ஹால்மார்க் தர அடையாள எண் கொண்ட நிரந்தர முத்திரை பெற வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இந்த புதிய விதி அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் நகைக்கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னை நகை வணிகர்கள் சங்க தலைவர் உதய் உம்மிடி மற்றும் சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி ஆகியோர் இதுகுறித்து கூறுகையில், மத்திய அரசு புதிய ஹால்மார்க் விதியை கட்டாயமாகியுள்ளது.

நகைகளில் ஹால்மார்க் விதியை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், ஹால்மார்க் அடையாள எண்ணை கொண்டு வர வேண்டும் என்பதைத் தான் எதிர்க்கிறோம் என தெரிவித்தனர். புதிய தர முத்திரை வழங்கும் வசதி உடைய, நாட்டின் 256 மாவட்டங்களிலும், இனி தங்க நகைகள் விற்பனையின் போது, தர முத்திரை கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. தர முத்திரை வழங்கும் மையங்களில் போதிய வசதியும், சாதனங்களும் இல்லை. இதனால், அவற்றில் ஏற்கனவே 16 கோடி முதல், 18 கோடி எண்ணிக்கையிலான தங்க நகைகள் முடங்கியுள்ளன. தற்போது, ஹால்மார்க் முத்திரை வழங்கும் மையங்களின் திறன் தினமும், 2 லட்சம் நகைகள் மட்டுமே.ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு தேவையான நகைகள் தேக்கமடைந்து, விற்பனைக்கு வராமல் உள்ளன.

ஒரு நகை செய்யப்பட்டு ஹால்மார்க் முத்திரை மற்றும் தனி ஹால்மார்க் அடையாள எண் பதிந்து, விற்பனைக்கு கொண்டு வர, ஒன்பது முதல் 12 நாட்கள் ஆகும். இதனால் தங்க நகைகள் தேக்கமடைந்து விற்பனை பாதிக்கப்படும். மேலும் தினசரி விலை உயர்வு, நகைக்கடைகளில் ஊழியர்கள் வேலையிழப்பு, மேலும் புதிதாக நகை வாங்குவோர் விவரங்கள் வழங்க வேண்டி உள்ளதால் தனிநபர் ரகசியம் காக்கும் உரிமை மீறப்படுகிறது. இதனால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே இந்த விதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் உள்ள 7000 நகை கடைகள், மாநிலம் முழுவதும் உள்ள 35 ஆயிரம் நகை கடைகளும் இன்று காலை 9 மணி முதல் 11.30 வரை மூடப்படும். அதன் பின்னரும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:  1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பதில்!

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: