தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – பணியில் தீவிரம் காட்டும் அரசு!!

தமிழக அரசின் தேர்தல் அறிவிப்புகளாக கொடுக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை பெற்ற நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்துவது தொடர்பான பணிகளில் அரசு ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தலின் போது கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை செயல்படுத்துவத்துவதில் அரசு தீவிரம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழக கூட்டுறவு வங்கிகளில் சுமார் 5 பவுன் வரை பெற்றுள்ள நகை கடனை அரசு தள்ளுபடி செய்யும் என அறிவித்தது. இதனிடையே திமுக அரசு ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் நிறைவுற்ற நிலையில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என குற்றசாட்டுகள் எழுந்து வந்தது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி இது தொடர்பாக கூறுகையில், ‘கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றதில் சில முறைகேடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கான முடிவு கிடைத்ததும் 5 பவுனுக்கு குறைவான நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும்’ என கூறியுள்ளார். இதற்கிடையில் தமிழகத்தில் தற்போது நிதி பற்றாக்குறை நிலவி வருகிறது.

என்றாலும் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என ஏற்கனேவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வாக்குறுதிகளை நிறைவேற்ற சில நிபந்தனைகளை விதிக்க அரசு ஆலோசித்து வருகிறது. அதன் மூலம் தகுதியுடையவர்களது கடனை தள்ளுபடி செய்யவும் அரசு முயற்சித்து வருகிறது. அந்த வகையில் 5 பவுன் கொண்ட தங்க நகைகளை அடமானம் வைத்திருப்பவர்களின் பட்டியலை அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர் என கூட்டுறவு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அதாவது கடன் தள்ளுபடியால் பலனடைந்தவர்கள், அரசு ஊழியர், கூட்டுறவு சங்க ஊழியர், அவர்களின் உறவினர், கடன் விபரம் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் முடிந்ததும் கடன் பெற்றவர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படலாம் என கூறப்பட்டு வருகிறது. அதன் கீழ் அரசு ஊழியர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், இரு சக்கர வாகனம் அல்லது கார் வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு கடன் தள்ளுபடி செய்யப்படாது என கூறப்படுகிறது. இதற்கான உரிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  கேரளா, தமிழ்நாடு எல்லைகளில் தீவிர கண்காணிப்பு!!
Back to top button
error: