உலகம்

எலன் மஸ்க்கை பின்னுக்கு தள்ளிய ஜெப் பெஸோஸ் – 6 நாட்களில் சரிந்த பங்குச்சந்தை!

உலக பணக்காரர்கள் பட்டியலில் கடந்த 6 நாட்களாக முதல் இடத்தில் இருந்தவர் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலன் மஸ்க். தற்போது பங்குசந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் மீண்டும் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மீண்டும் இரண்டாம் இடம்

உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெப் பெஸோஸ் கடந்த 2017 ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். தற்போது கடந்த சில நாட்களாக உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலன் மஸ்க், டெஸ்லா எலக்ட்ரிக் கார் பங்குகளின் விலையில் ஏற்பட்ட உயர்வின் காரணமாக முதல் இடத்திற்கு முன்னேறினார்.

கடந்த வியாழக்கிழமை முதல் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் திடீரென குறைந்ததை அடுத்து மீண்டும் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். நம்பர் ஒன் இடத்தில் இருந்த போது எலன் மஸ்கின் முழு சொத்தின் நிகர மதிப்பு 188.5 பில்லியன் டாலராக இருந்தது. இது அமேசான் நிறுவனர் பெஸோஸின் சொத்து மதிப்பை விட 1.5 பில்லியன் டாலர் அதிகமாக கணக்கிடப்பட்டது.

ets dualpane 48

இந்நிலையில் நேற்றைய அமெரிக்க பங்கு சந்தையில் டெஸ்லா பங்குகளின் விலை 8% குறைந்தது. இந்த பங்கு வீழ்ச்சியினால் எதிர்பாராதவிதமாக மஸ்கின் சொத்து மதிப்பிலிருந்து 13.5 பில்லியன் அமெரிக்கா டாலர்களை அவர் இழக்க நேரிட்டது. தற்போது இருக்கும் மஸ்கின் சொத்து மதிப்பு 176 பில்லியன் அமெரிக்கா டாலர் என போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா பங்குசந்தை சரிவில் அமேசான் நிறுவனமும் 2% வீழ்ச்சியடைந்தது. இதனால் அமேசான் நிறுவனத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது இருக்கும் பெஸோஸின் மொத்த சொத்து மதிப்பு 181.3 பில்லியன் டாலர் உடன் மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். டெஸ்லாவின் பங்குகளில் ஒரு சதவீதம் மட்டுமே தனது நிறுவனத்தின் லாபம் இருப்பதாக மஸ்க் தெரிவித்த சிலநாளிலேயே இந்நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Back to top button
error: Content is protected !!