சினிமா

அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகும் ‘ஜெயில்’!

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகிவரும் ‘ஜெயில்’ திரைப்படம் அடுத்த மாதம் டிச.9 தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவில் தன்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது `ஜெயில்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார். இந்தப்படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் அபர்ணாநதி அவர் ஜோடியாக நடிக்கிறார். மேலும் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ள இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை கே.இ.ஞானவேல் ராஜா கைப்பற்றி உள்ளார்.

இந்தப்படத்தில் ‘இசை அசுரன்’ என ரசிகர்களால் போற்றப்படும் ஜிவி. பிரகாஷ் குமார், கர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘ஜெயில்’ படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படம் அடுத்த மாதம் டிசம்பர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ”விஜய்க்கும் அவரது தாய்க்கும் மனகசப்பு இல்லை” - எஸ்.ஏ.சி
Back to top button
error: