விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியில் இத்தாலி அணி வெற்றி..!

யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி, இத்தாலி அணி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. 53 ஆண்டுகளுக்கு பின் இத்தாலி அணிக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது.

லண்டன் வெம்பிளே மைதானத்தில் நடந்த 16-வது யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

உள்ளூர் ரசிகர்கள் வெள்ளத்தில் களமிறங்கிய நிலையில், ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே இங்கிலாந்து வீரர் Luke Shaw கோல் அடித்து கணக்கைத் தொடங்கினார். முதல் பாதி ஆட்டத்தில் எவ்வளவோ முயன்றும் இத்தாலி அணி வீரர்களால் பதில் கோல் அடிக்க முடியவில்லை.

67-வது நிமிடத்தில் இத்தாலி வீரர் Leonardo Bonucci பதில் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். தொடர்ந்து இரு அணியினரும் அடுத்த கோல் அடிக்காத நிலையில் ஆட்டம் சமனில் முடிந்தது.

கூடுதல் நேரத்திலும் எந்த அணியும் கோல் அடிக்காததால் பெனால்டி ஷூட்-அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் 3-க்கு 2 என்ற கோல் வித்தியாசத்தில் இத்தாலி அணி வெற்றது.

வெற்றி பெற்ற இத்தாலி அணிக்கு யூரோ கோப்பை வழங்கப்பட்டது. 1968ம் ஆண்டுக்குப்பின் அந்த அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுவது இதுவே முதன்முறை என்பதால் வீரர்கள் உற்சாகமடைந்தனர்.

கடைசி வரை போராடியும் கோப்பையை வெல்ல முடியாததால் சோகத்தில் ஆழ்ந்த இங்கிலாந்து அணி வீரர்கள் ஒருவரையொருவர் கட்டித் தழுவி ஆறுதல் கூறிக்கொண்டனர். போட்டியைக் காண வந்த இளவரசர் வில்லியம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உள்ளூர் ரசிகர்கள் மைதானத்தில் ஏமாற்றத்துடன் காணப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: