உலகம்

இத்தாலிய கலைஞரின் ஓவியம்.. ரூ.670 கோடிக்கு ஏலம்..

அமெரிக்காவில் நடந்த ஏலத்தில் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய கலைஞர் சாண்ட்ரோ போடிசெல்லியின் ஓவியம் ரூ.670 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

அமெரிக்காவில் நேற்று(ஜன.29) நடைபெற்ற ஏலத்தில் 1440 முதல் 1510 வரை வாழ்ந்த இத்தாலிய கலைஞர் சாண்ட்ரோ போடிசெல்லி வரைந்த ஓவியம் விற்பனையானது. 1400 களில் போடிசெல்லி வரைந்த இளைஞனின் ஓவியத்திற்கு இரண்டு பேர் போட்டியிட்டனர். 1400 களில் வரையப்பட்ட இந்த ஓவியத்திற்கு வெறும் ஐந்து நிமிடத்திற்கும் குறைவான நேரம் மட்டுமே ஏலம் நீடித்தது.

முதலில் இந்தப் போட்டியில், ஒருவர் அந்த ஓவியத்தை 80 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் எடுத்தார். அதன்பிறகு மற்ற கட்டணங்கள் மற்றும் கமிஷன் ஆகியவற்றை சேர்த்து, அந்த ஓவியம் 92.2 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது. இதன் இந்திய மதிப்பு 670 கோடிகளுக்கு மேலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button
error: Content is protected !!