தமிழ்நாடுமாவட்டம்

9 மாவட்டங்களில் நாளை காலை வரை மழை தொடரும்!

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நாளை காலை வரை தொடர் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மேகங்கள் மெதுவாக நகர்வதால் இன்றைய நாளின் பிற்பகுதியில் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் நாளை (19ம் தேதி) காலை வரை கனமழை தொடர வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் – நாளை வெளியீடு!!
Back to top button
error: