தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

images 2021 05 30T160927.805

கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் வருகிற 23-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் எனக் கூறியுள்ள வானிலை மையம், பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மன்னார் வளைகுடா மற்றும் வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: