ஆரோக்கியம்தமிழ்நாடு

மொச்சைக்கொட்டை சாப்பிட்டால் இத்தனை நோய்கள் குணமாகுமா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

மொச்சை அவரை குடும்பத்தை சார்ந்தது. இதனை லிமா பீன்ஸ், பட்டர் பீன்ஸ் என்று அழைப்பார்கள்.

மொச்சைக் கொட்டைக் கொண்டு பல்வேறு உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.

மொச்சைக் கொட்டை பல்வேறு ஊட்டச்சத்துகளைக் கொண்டது. அன்டி ஆக்சிடென்ட், தாவர ஸ்டீரால் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

இதில் எண்ணற்ற மருத்துவப்பயன்கள் நிறைந்துள்ளது. மேலும் பல நோய்களுக்கு தீர்வாக வழங்குகின்றது.

அந்தவகையில் மொச்சையில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

ஒரு கப் பீன்ஸ் அல்லது பயறு எடுத்துகொள்வது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். நீரிழிவு மற்றும் இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனை இருப்பவர்களுக்கு மொச்சை நல்ல தேர்வாக இருக்கும்.

மொச்சை போன்ற அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது இதய நோய்களை தடுக்க செய்கிறது.

மொச்சையில் இருக்கும் இரும்புச்சத்து சிவப்பு இரத்த அணுக்களின் சுழற்சியை அதிகரிக்க செய்கிறது. உடலில் ஆக்ஸிஜனேற்றத்தை மேம்படுத்தி ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. கலொரிகள் குறைவாகவும் கொழுப்பு இல்லாமலும் இருப்பதல் இது உடல் செயல்பாட்டை சீராக பராமரிக்கவும் செய்கிறது.

மொச்சையில் உள்ள பொட்டாசியம் செரிமான செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. நார்ச்சத்து செரிமானம் மற்று இரைப்பை குழாய்களை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல் இல்லாமல் பாதுகாக்கிறது.

மொச்சையில் உயர் இரும்புச்சத்து உள்ளடக்கம் உள்ளது.இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். இரத்த சோகையால் வரக்கூடிய பலவீனம், குமட்டல், சோர்வு தலைவலி போன்றவற்றை தவிர்க்க செய்யும்.

மொச்சையில் உள்ள மாங்கனீசு கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த மூலம் என்பதால் இந்த தாதுக்கள் எலும்பு வளர்ச்சியை சரியான அளவில் ஊக்குவிக்கிறது. எலும்புகளை வலுப்படுத்தவும் செய்கிறது.

நம் சருமத்தை ஆரோக்கியமாகவும், இயற்கையாகாவும் ஒளிர வைக்க செய்கிறது. இது சரும செல் சேதம். நோய் மற்றும் பிற உடல் நலம் தொடர்பான பிரச்சனைகளையும் தடுக்க செய்கிறது.

கூந்தலின் ஆரோக்கியத்துக்கு இரும்பும் அவசியம். மொச்சைக்காய் சிறந்த இரும்புச்சத்தின் ஆதாரங்களில் ஒன்று. முடி வளர்ச்சியை ஊக்குவிக்க மொச்சையில் இருக்கும் இரும்புச்சத்து உதவுகின்றது.

குறிப்பு

இதை சிறுநீரக கற்கள் மற்றும் கீல் வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக சாப்பிட கூடாது.

இதில் உள்ள ப்யூரின் ஆனது உடலில் யூரிக் அமிலமாக உருவாகிறது. பருப்பு வகைகள் அதிகமாக சேர்ப்பது ப்யூரின் தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்க கூடும்.

Back to top button
error: Content is protected !!