ஆரோக்கியம்தமிழ்நாடு

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த பொருளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொண்டால் போதும்!

கொத்தவரங்காய் புரதம், வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்றவற்றை அதிகமாக கொண்டுள்ளது. வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இரும்புச்சத்து இரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.

கொத்தவரை செடியின் வேர் மண்ணில் நைட்ரஜன் சத்தை அதிகரிக்க செய்து மண்ணின் வளத்தை பெருக்குகிறது. அதனால் இது விவசாயிகளின் விருப்பப் பயிராகவும் உள்ளது. சத்துக்கள் நிறைந்த கொத்தவரங்காய் உணவுகள் கொத்தவரை செடி வகையை சேர்ந்தது. மூன்று முதல் நான்கு அடி உயரம் வரை வளரக்கூடியது. இது சீனி அவரைக்காய் என்றும் அழைக்கப்படுகிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.

கொத்தவரங்காய் சற்று கசப்பு சுவை உடையது. கொத்தவரங்காய் சாப்பிட்டால் வாதம் அதிகரிக்கும் என்றும் கை, கால் வலி உண்டாகும் என்றும் சிலர் கருதுகிறார்கள். அத்துடன் தேங்காய் துருவல், மிளகு, சீரகம் போன்ற பொருட்களை சேர்த்து சமைப்பதால் அதில் இருக்கும் வாததன்மை சமநிலையடைந்து விடும்.

கொத்தவரங்காய் ஒரு இயற்கை உணவாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பல கிரேவிகள் மற்றும் இதர உணவுகளில் இணைச்சேர்க்கை உணவாகவும் உள்ளது. மிகவும் அதிகமான மருத்துவ குணங்கள் கொண்ட கொத்தவரங்காயை தினசரி சாப்பிடுவது உடலை உறுதியாக வளர்க்க உதவும்.

கொத்தவரை, ஆப்பிரிக்க காட்டு வகை செடியிலிருந்து மேம்பட்ட ஒரு வகை தாவரம் ஆகும். உண்ணக்கூடிய ஒரு காயாக இனம் கண்டு பயன்படுத்தியது இந்தியா மற்றும் பாக்கிஸ்தான். குறிப்பாக இந்திய-பாக்கிஸ்தான் எல்லைப் பகுதியான ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப் படுகிறது.

சமையலுக்காகப் பயன்படுத்துவதைக் காட்டிலும் கொத்தவரை விதையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கார் பிசின் உணவுத்தயாரிப்பு தொழிலில் முக்கிய சேர்க்கைப் பொருளாகவும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளிலும் பயன்படுகிறது.

சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அழித்து புதிய செல்களை உருவாக்கும் தன்மை கொண்ட ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் கொத்தவரங்காயில் காணப்படுகின்றன. ஃப்ரீ ராடிக்கல்கள் என்பது நமது உடலில் புற்று நோய்க்கான செல்களை உருவாக்க கூடியது. இதனை உருவாக்காமல் நம்மை தற்காத்து கொள்கிறது இந்த கொத்தவரங்காய். கொத்தவரங்காயில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் சத்து அனைத்தும் நமது உடலில் இருக்கும் தேவையற்ற கலோரிகளை வெளியேற்றும்.

பல் கூச்சம்

வலிமை இழந்த எலும்புகளுக்கு வலு ஊட்டவும் மற்றும் பல் கூச்சம், பற்களில் வலி, பற்சிதைவு போன்ற அனைத்து கோளாறுகளுக்கும் நல்ல தீர்வை தர கூடியது.

கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பிணி பெண்கள் இதை உண்பதன் மூலம் அவர்களது குழந்தை கருவில் நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகிறது. பிறப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை இதன் மருத்துவ குணம் குறைக்கிறது. ஆகையால் இதை நிச்சயம் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க வேண்டும்.

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த

கொத்தவரையில் கிளைகோ நியூட்ரியன்ட் என்னும் மருத்துவ வேதிப்பொருள் மிகுதியாக உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.

ரத்த ஓட்டம் சீராக

அதிக அளவிலான போலிக் அமிலத்தையும் கொத்தவரை கொண்டுள்ளது. குழந்தையின் மூளை, எலும்பு, முதுகுத்தண்டு போன்றவை சீராக வளர்வதற்கு இச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் ரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது.

இரத்த சோகையை போக்க

இரத்தச் சோகை இருப்பவர்கள் இதை சாப்பிடும் போது அதிக இரத்தம் சுரக்கும். இந்த இரத்த பற்றாக்குறையை நீக்கி உடலை நல்ல நிலைமைக்கு கொண்டு வருகிறது.

எடை குறைக்க

கலோரி அளவுகளில் மிக குறைந்த உணவாக இருந்தாலும், வைட்டமின்களையும் மற்றும் தாதுக்களையும் அதிகமாக கொண்டிருக்கும் உணவு இது. ஆகையால் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை ஒரு உணவாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இது தேவையற்ற எடையை குறைக்க உதவும்.

Back to top button
error: Content is protected !!