ஆரோக்கியம்தமிழ்நாடு

நீண்ட கால ஆரோக்கியத்தை வழங்கும் சக்திவாய்ந்த தாவரங்கள்! இப்படி எடுத்து கொண்டால் நன்மையே!

இயற்கையில் கிடைக்கும் தாவரங்களில் அதிகம் மருத்துவகுணங்கள் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே.

இயற்கை அளிக்கும் மருந்துகள் நமக்கு நீண்ட கால ஆரோக்கியத்தை வழங்குகிறது. மேலும் இயற்கை மருந்துகளின் விலை மிகவும் குறைவாக இருக்கும்.

அதோடு இயற்கை மருந்துகள் மிகவும் பாதுகாப்பானவை ஆகும். சித்த மருத்துவம் முதல் பாட்டி வைத்தியம் வரை இன்றுவரைக்கும் மருத்துவம் நிறைந்த பல தாவரங்கள் உதவியாக இருக்கின்றது.

அந்தவகையில் தற்போது நீண்ட கால ஆரோக்கியத்தை வழங்கும் சக்திவாய்ந்த தாவரங்கள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

மஞ்சள் புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளையில் ஏற்படும் நோய்கள் போன்றவை ஏற்படுவதை மஞ்சள் குறைக்கின்றது. மேலும் உடல் வலியைக் குறைத்து, நமது மன நிலையை புத்துணா்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. மஞ்சளை நமது உணவுகளில் கலந்து சாப்பிடலாம், அல்லது பாலில் மஞ்சள் பொடியைக் கலந்து பானமாக அருந்தலாம்.

துளசிச் செடி நமது சொிமானத்தை சீா்படுத்துகிறது. நமது நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கிறது. வளா்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. நமது மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நமது உணவுகளை அழகுபடுத்த துளசியைப் பயன்படுத்தலாம். மேலும் நாம் அருந்தும் பானங்களில் துளசியைக் கலந்து அருந்தலாம்.

இனிப்புத் துளசியின் இலைகள் சா்க்கரையை விட அதிக இனிப்பாக இருக்கும். இனிப்புத் துளசியில் இனிப்பு அதிகமாக இருப்பதன் காரணமாக, சா்க்கரை நோயாளிகளுக்கு சா்க்கரை வழங்குவதற்குப் பதிலாக இனிப்புத் துளசி வழங்கப்படுகிறது. இனிப்புத் துளசியை நமது உணவிலும் மற்றும் பானங்களிலும் கலந்து சாப்பிடலாம்.

பூண்டு உணவிற்கு மணத்தையும், சுவையையும் தருகிறது. அதோடு நமது சொிமானத்திற்கு உதவி செய்கிறது. இரத்த அழுத்தத்தை சீா்படுத்துகிறது. கொழுப்பின் அளவை பராமாிக்கிறது. மூளைச்சிதைவு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. பூண்டை பச்சையைாக சாப்பிடலாம் அல்லது நமது உணவுகளில் சோ்த்து சமைத்து சாப்பிடலாம்.

புதினா நமது சொிமானத்திற்கு உதவி செய்கிறது. தலைவலியில் இருந்து விடுதலை கொடுக்கிறது. அலா்ஜிகளில் இருந்து நிவாரணம் வழங்குகிறது. வாய்த் துா்நாற்றத்தைத் தடுக்கிறது. புதினா நறுமண எண்ணெயை நமது உடலில் தடவலாம் அல்லது முகா்ந்து பாா்க்கலாம். மேலும் தேநீாில் புதினா இலைகளைக் கலந்தும் அருந்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: