ஆரோக்கியம்தமிழ்நாடு

சர்க்கரை நோயின் அளவு குறைய இந்த காயை கூட்டு வைத்து சாப்பிட்டதால் நன்மை கிட்டும்!

புடலங்காய் ஆங்கிலத்தில் gourd family என்று சொல்வார்கள். அதாவது சுரைக்காய், பாகற்காய், புடலங்காய், வெள்ளரிக்காய், ஸ்குவாஷ் ஆகிய காய்கறிகள் அனைத்தும் இந்த குடும்பத்துக்குள் தான் வருகிறது. உலகம் முழுவதுமே பயன்படுத்தக் கூடிய காய்கறிக் குடும்பம் தான் இது. தென்மேற்கு ஆசியப் பகுதிகளில் உள்ள நாடுகளில் இருந்து தான் புடலங்காய் கண்டுபிடிக்கப்பட்டது.

புடலங்காயில் பல வகைகள். குட்டைப் புடலங்காய், வெள்ளைப் புடலங்காய், ஹைப்ரிட் புடலங்காய் என உள்ளது. உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் ஒரு மிகச்சிறந்த காய்தான் புடலங்காய்.புடலை இலைச் சாற்றுடன் கொத்தமல்லி சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை தினமும் மூன்று வேளை குடித்து வர மஞ்சள் காமாலை கட்டுக்குள் வரும். காய்ச்சலையும் கட்டுப்படுத்த வல்லது.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இந்தோனேசியா, மலேசியா, ஸ்ரீலங்கா மற்றும் சீனா ஆகுிய நாடுகளில் தான் இந்த வகை காய்கறிகள் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.

அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்கும். நன்கு பசியைத் தூண்டும். குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும்.

பெண்களுக்கு

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வையைத் தூண்டும். இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

இதய கோளாறு

இதய கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து தினமும் 2 டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து 48 நாட்களுக்கு சாப்பிட்டு வர இதயம் சம்பந்த பட்ட கோளாறுகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

மூலநோய்

இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும். மூலநோய்க் காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும்.

ஆண்மை கோளாறு

ஆண்மை கோளாறுகளை நிவர்த்தி செய்யும் புடலங்காய் விந்துவை கெட்டி படுத்தும். புடலங்காய் சாப்பிடுவதால் காம உணர்வு அதிகரிக்கும். உடல் தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும்.

கண் பார்வை

கண் பார்வையைத் தூண்டும். இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

நீர்சத்துக்கள்

புடலங்காயில் நீர்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், நமது உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை, வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றி, வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை தடுக்கிறது.

சர்க்கரை வியாதி

ஒரு மனிதனின் பரம்பரை காரணமாகவும் மற்றும் அவனது தவறான உணவு பழக்கங்களாலும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி புடலங்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் தடுக்கிறது.

Back to top button
error: Content is protected !!