ஆரோக்கியம்தமிழ்நாடு

புற்றுநோயை கட்டுப்படுத்தும் எள்.. இப்படி சாப்பிட்டால் நன்மையே!

எள்ளு சாப்பிடுவதால், புற்றுநோய் வராமல் இருக்கும். அதுமட்டுமின்றி, புற்றுநோய் வந்தவருக்கு இது அருமருந்தாகும்

மேலும் குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றி, சுத்தமாக வைக்கிறது.

அந்தவகையில் புற்றுநோய்க்கு மருந்தான இந்த எள்ளை வைத்து சூப்பரான சாதம் ஒன்றை எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

உதிரியாக வடித்த சாதம் – 1 கப்
கடுகு – சிறிதளவு
எள் – 25 கிராம்
நெய் – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 4
உளுத்தம் பருப்பு – 50 கிராம்
முந்திரிப் பருப்பு – 20
பெருங்காயத் தூள் – சிறிதளவு
எலுமிச்சம்பழம் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு கடாயில் நெய் காய்ந்தவுடன் அதில் எள்ளு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்கயத்தூள் ஆகியவற்றை சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

பின் அதே கடாயில் சிறிதளவு கடுகு, முந்திரி, கறிவேப்பிலையை சேர்த்து தாளித்து அதில் வடித்து ஆறவைத்துள்ள சாதத்தை சேர்க்கவும்.

அத்துடன் நாம் வறுத்து பொடி செய்து வைத்துள்ள எள்ளு பொடியை சேர்க்கவும்.

பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து வாசனைக்காக சிறிதளவு நெய், எலுமிச்சை பழ சாறு சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான எள்ளு சாதம் ரெடி.

Back to top button
error: Content is protected !!