தமிழ்நாடு

காவல் நிலையங்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிப்பு – டிஜிபி அறிவிப்பு!!

தமிழகத்தில் காவல் நிலைய பெயர் பலகையில் தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றிருந்தால் உடனே அதனை நீக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவதில் காவல்துறையின் பங்கு இன்றியமையாததாகும். உலகையே அச்சுறுத்தும் கொரோனா பரவலுக்கு மத்தியில் சாலைகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த கால கட்டத்தில் தன் உடல் நிலையை கவனித்து கொள்ள முடியாமலும் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமலும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். ஏராளமான காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் பாதுகாப்பு பணிக்காக அவ்வபோது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் காவல் துறையினருக்கான விடுப்பு 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவலர்கள்‌ தங்கள்‌ உடல்‌ நலனைப் பேணிக்காத்து கொள்ள வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரும் இதை வரவேற்றனர். அதனை தொடர்ந்து தற்போது காவல் நிலையங்களுக்கு புதிய அறிவிப்பாக காவல் நிலைய பெயர் பலகையில் தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெறக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல் நிலைய பெயர் பலகையில் தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றிருந்தால் உடனே நீக்க தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சில காவல் நிலைய பெயர் பலகையில் தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றிருப்பது தவறான புரிதலை ஏற்படுத்துகிறது. காவல்நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தின் மூலம் பெயர் பலகைகளை வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
Back to top button
error: