உலகம்

தாலிபன்களை எதிர்த்து வீதியில் களமிறங்கிய இஸ்லாமியப் பெண்கள்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 15) ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி காபூலை கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை அவர்கள் வசம் ஒப்படைத்துவிட்டு வெளிநாடு தப்பிச் சென்றார்.

தலிபான்கள் மக்களைத் தாக்கிவிடுவார்கள் என்று பயந்து, ஏராளமான மக்கள் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல விமானங்களில் ஏற முயன்றனர். இந்த கொடூரமான முயற்சியில், மூன்று பேர் விமானம் பறக்கும் நடுவில் இருந்து விழுந்து பரிதாபமாக இறந்தனர்.

20210818 161931

இந்நிலையில், தலிபான்களின் கடந்த கால வரலாற்றைக் கண்டு பயந்த காபூலில் உள்ள இஸ்லாமிய பெண்கள் தலிபான்களுக்கு எதிராக பேனர்களை பிடித்து வீதிகளில் இறங்கினர். முக்கியத் தெருவில் தலிபான்கள் தங்கள் உரிமைகளை பறிக்கக் கூடாது என்று கோஷமிட்டனர்.

காபூலில் உள்ள முஸ்லீம் பெண்கள், தெருக்களில் தலிபான்களை எதிர்த்து ஒன்றிணைந்து போராட வேண்டும், கல்வி, அரசியல் அல்லது வேலைக்கான எந்த உரிமையும் பறிக்கப்படக்கூடாது என்றும் காபூல் நகர இஸ்லாமியப் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:  இலங்கையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: