ஆன்மீகம்

படுக்கை அறையில் இதெல்லாம் இருந்தால் இவ்வளவு பிரச்சனையா?

வீட்டில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை வருவதற்கு சில முக்கிய காரணங்களும் உள்ளது. இதோடு சேர்த்து சில பொருட்களை நம்முடைய படுக்கை அறையில் வைக்கக் கூடாது என்றும் நம் முன்னோர்களினால் சொல்லப்பட்டுள்ளது.

நம் முன்னோர்கள் சில விஷயங்களை சொல்லி இருந்தால், அதில் கட்டாயம் அனுபவ ரீதியான, அறிவியல் ரீதியான உண்மையும் அடங்கி இருக்கும் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு வீட்டின் படுக்கை அறை எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும்? எந்த பொருட்கள் படுக்கை அறையில் கட்டாயமாக இருக்கக் கூடாது. என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன சண்டைகள் வந்து போவதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் அந்த சண்டை பெரிய வாக்குவாதமாக மாறி, சண்டை பெரிதாகி, பிரிவுக்கு காரணம் ஆகிவிடக்கூடாது. ஒரு குடும்பத்தின் ஒற்றுமைக்கு காரணமாக இருப்பவர்கள், கணவன் மனைவி தான். அதே குடும்பம் பிரிந்து போவதற்கு காரணமாக இருப்பவர்களும் கணவன் மனைவி தான். கணவன் மனைவி ஒற்றுமையாக இல்லை என்றால் அவர்களின் குழந்தைகள், உறவினர்கள் எல்லோரும் ஒருசேர பாதிக்கப்படுவார்கள்.

முதலில் உங்கள் வீட்டு படுக்கை அறை தென் மேற்கு திசை நோக்கி இருப்பது மிகவும் நல்லது. எக்காரணத்தைக் கொண்டும் தென்கிழக்கில், வடகிழக்கிலும் கணவன்-மனைவி தாங்கும் படுக்கை அறை அமைந்து இருக்கக் கூடாது. முடிந்தவரை வாடகை வீட்டிற்கு செல்வதற்கு முன்பும் இந்த வாஸ்துவை பார்த்துவிட்டு செல்வது தான் மிக நல்லது.

இதேபோல் உங்கள் வீட்டு படுக்கை அறையில் சிகப்பு வண்ணத்தில் பெட்ஷீட், தலையணை உறை, ஸ்கிரீன் இவைகள் இல்லாமல் இருப்பது மிகவும் நல்லது.

அடுத்ததாக கண்ணாடி, கடிகாரம், மீன் தொட்டி, தொலைக்காட்சி, கணினி, தையல் மெஷின், தயவு செய்து உங்கள் வீட்டில் இடப்பற்றாக்குறை இருந்தாலும், இந்த பொருட்களை படுக்கையறையில் வைக்கவே வைக்காதீர்கள்.

பீரோவில் கண்ணாடி இருந்தால் கூட, பீரோவை படுக்கை அறையில் இருந்து அகற்றி விடுவது தான் மிகவும் நல்லது.  தொலைக்காட்சி, கணினி இவைகளுக்கு நேர்மறை ஆற்றலை குறைக்கும் சக்தி உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி பெட்டியும் கணினியும் வெளியிடும் மின் ஆற்றலானது நேர்மறை சக்தியை அழிக்கும் வல்லமை கொண்டவை என்பதால் முடிந்தவரை உங்களது படுக்கை அறையில் இந்த பொருட்களை எல்லாம் அகற்றி விடுவது மிக நல்லது.

கண்ணாடி, கடிகாரம் இவையெல்லாம் படுக்கை அறைக்குள் மூன்றாவது நபர் இருப்பது போன்று ஒரு அறிகுறியை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக சொல்லப்பட்டுள்ளது.

மீன் தொட்டியும் கண்ணாடியினால் செய்யப்பட்டது என்பதால் அதையும் தயவுசெய்து படுக்கையறையில் வைத்துக்கொள்ள வேண்டாம்.

தேவையற்ற இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் உங்கள் வீட்டில் ஏதாவது இருந்தால், அதை நீங்கள் உபயோகப் படுத்தாமல் இருந்தால், முடிந்தவரை உங்கள் வீட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டாம்.

பல பேர் படுக்கை அறையில் பரண் மேல் இதைஎல்லாம் வைத்திருப்பார்கள். அது மிகவும் தவறான ஒன்று. தையல் மெஷின் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களில் அடங்கும். எதிர்மறை ஆற்றலை அதிகரிக்க கூடிய சக்தி இந்த இரும்பு பொருளேக்கு அதிகம் உள்ளது. ஆகவே முடிந்தவரை படுக்கை அறையில் வேண்டாத இரும்பு பொருட்களையும் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டாம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: