மேரு விக்கிரகத்தை வீட்டில் வைத்து வழிபடலாம். இது சாக்தம் என்று சொல்லப்படுகின்ற சக்தி வழிபாட்டினை அடிப்படையாகக் கொண்டது. அம்பாள் உபாசனை என்பது இதற்கு அவசியம். ஆதிபராசக்தியின் அம்சமே இந்த மேரு என்கிற விக்கிரகம்.
அம்பிகையின் யந்திர ரூபமே ஸ்ரீசக்கரம். இந்த இரண்டையும் பூஜிப்பதற்கு அம்பாள் உபாசனை என்பது அவசியம் தேவை. அதற்கு முதலில் ஒரு குருவை அணுக வேண்டும். அவர் ஸ்ரீவித்யா உபாசனையைத் தொடர்ந்து செய்து வருபவராக இருக்க வேண்டும்.
அவரிடம் இருந்து உபதேசம் பெற்றுக்கொண்டு அவர் அனுமதி அளித்த பிறகே மேருவை வைத்து பூஜிக்க வேண்டும். ஒரு சிலரது இல்லங்களில் பரம்பரை பரம்பரையாக இந்த வழிபாடு என்பது தொடர்ந்து கொண்டிருக்கும்.
அவ்வாறு பரம்பரையில் ஸ்ரீவித்யா உபாசனை என்பது இருக்கும் பட்சத்தில் இவர்கள் தனியாக குருவைத்தேடிப் போக வேண்டிய அவசியமில்லை. தனது பரம்பரையில் உள்ள பெரியவர்களையே குருவாகக் கொண்டு உபாசனையைத் தொடங்கிவிடலாம்.
மேரு விக்கிரகத்தை வைத்து வழிபட வேண்டிய விதிமுறைகளையும், ஆச்சார அனுஷ்டானங்களையும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் குருவின் மூலமாக மட்டுமே அறிந்து கொள்ள இயலும். குருவருள் இருந்தால் திருவருளை எளிதாக அடைந்துவிடலாம்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh