ஆன்மீகம்

காகத்திற்கு சோறிடும் போது எள் சேர்ப்பது அவசியமா?

சனீஸ்வரருக்குரிய வாகனமாக காகம் இருக்கும் நிலையில், காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமதர்ம ராஜனின் தூதுவன் என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாக, நாம் உணவு சாப்பிடும் முன்பாக காகத்துக்கு ஒரு பிடி உணவு வைக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் பாரம்பரியமாக கூறி வந்துள்ளனர். அதையடுத்து காகத்திற்கு உணவு வைப்பது எதற்காக? என்றும், அவ்வாறு வைப்பதால் என்ன பலன் கிடைக்கும் என்றும் பார்க்கலாம்.

உணவு வைப்பது எதற்காக?

இந்து மத சம்பிரதாயத்தின்படி, உயிரிழந்த ஆன்மாக்கள் இறந்த பிறகு தாங்கள் வசித்த இடத்தை தேடி வந்து, தங்கள் குடும்பத்தினர் எப்படி இருக்கின்றனர் என பார்ப்பதாக நம்பிக்கை.

அப்போது, அந்த ஆன்மாக்கள் காகத்தின் வடிவில் வருவதாகக் கூறப்படுகிறது.

அதனால், முன்னோர்களை நினைத்து தினமும் ஒரு பிடி சாதம் காக்கைக்கு வைக்க வேண்டும்.

அப்போது தான் அவர்கள் மனம் குளிர்வதோடு, வயிறும் குளிர்ந்து நமக்கு ஆசி வழங்குவார்கள்.

முன்னோர்களின் ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு காகத்திற்குத் தினசரி உணவிட வேண்டும் என்ற பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

தர்ப்பணம், திவசம் கொடுக்கும் தினத்தன்று மட்டும் சாதத்தில் எள் சேர்க்க வேண்டும். மற்ற நாட்களில் சாதம் மட்டும் வைத்தால் போதுமானது.

என்றைக்கு நல்லது

காகத்திற்கு தினமும் சாதம் வைக்க முடியாவிட்டால், மாதம் தோறும் வருகிற அமாவாசை தினத்தன்று அவர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

அதுவும் முடியாவிட்டால், புரட்டாசி மாதம் வருகிற மகாளய அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற நாட்களிளாவது முன்னோர்களின் பெயர்களை சொல்லி அவர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இரைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

எதற்காக எள்

எள் என்பதை வடமொழியில் திலம் என்று கூறுவார்கள். திலம் என்றால் விஷ்ணோர் அம்ச சமுத்பவ என்று பொருள்.

விஷ்ணு பகவானின் அம்சமாக தோன்றியது எள். அதனால், திலம் என்று சொல்லப்படும் எள்ளை தானமாகக் கொடுத்தாலே சகல பாவங்களும் நீங்கி விடும்.

எள்ளும், தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது. அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும், தண்ணீரும் கொடுத்து பித்ருக்களை மகிழ்ச்சியடைய செய்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும்.

என்ன பலன்

காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும்.

காகம் சனீஸ்வர பகவானின் வாகனம் என்பதால் காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களிலிருந்தும் விடுபடலாம்.

இதையும் படிங்க:  பூஜை செய்யும்போது கற்பூரம் ஏற்றுவது ஏன்?

இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம்.

ஏழரை சனி நடைபெறும் காலங்களில் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைப்பதன் மூலம் ஏழரை சனியின் தாக்கம் சற்றே குறையும்.

காகத்திற்கு நாம் உணவிடும் போது உணவையும் சாப்பிடுவதுடன், வீட்டுச் சுற்று வட்டாரத்தில் ஏதேனும் பூச்சிகள் இறந்து கிடந்தால் அவற்றையும் அப்புறப்படுத்த செய்கிறது. இதனால் நோய்கிருமிகள் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

காகத்திற்கு உணவளிக்கும் பொழுது, காகமானது தன் கூட்டத்தையே அழைத்து வந்து உணவைப் பகிர்ந்து கொள்கின்றன. இதனைப் பார்க்கும் போது நாமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிற தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.

காகத்திற்கு உணவு வைப்பதால் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாக கிடைப்பதோடு, சுற்றுப்புறமும் சுகாதாரமாக இருக்கும், சனிபகவானின் அருளும் கிடைக்கும்.

காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது, உங்கள் வாழ்வில் தீராத கடன் தொல்லைகள் நீங்கி, புத்திர சந்தான பாக்கியம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: