ஆரோக்கியம்தமிழ்நாடு

காலையில் எலுமிச்சை சாறு குடிப்பது நல்லதா?

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

எலுமிச்சையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் தான் எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனைக்கு இயற்கை வழியை நாடும் போதும் அதில் நிச்சயம் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது.

செரிமானத்திற்கு உதவும்

எலுமிச்சையானது செரிமானத்திற்கு உதவும் பித்தநீரை சுரக்க உதவுகிறது. மேலும் இதில் கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், அவை செரிமான பாதையில் உள்ள டாக்ஸின்களை எளிதில் வெளியேற்றும். காலையில் வெதுவெதுப்பான நீரில் செய்யப்பட்ட எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் குடலியக்கம் சீராக இருக்கும் என்று மருத்துவர்கள் கூட பரிந்துரைக்கின்றனர்.

main qimg 868957f451b815821980a44b0fc59e7a

உடல் எடையை குறைக்க உதவும்

இது கிட்டத்தட்ட அனைவருக்குமே தெரிந்த விஷயமாகும். அதிலும் ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறினை பிழிந்து, அதில் தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இதனால் எலுமிச்சையில் உள்ள பெக்டின் என்னும் நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும் விரைவில் உடல் எடை குறைவதற்கு இந்த முறை சரியானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

main qimg 226844f96654ba753fe9c7fd82573165

சுத்தமான சருமம்

எலுமிச்சையானது இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு மட்டுமின்றி, புதிய இரத்த செல்களின் உற்பத்திக்கும் உதவியாக உள்ளன. அதிலும் இந்த ஜூஸில் தேன் சேர்த்து குடிப்பதால், அவை கொலாஜனை ஊக்குவித்து, சருமத்தை சுத்தமாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

main qimg e2ffc86a9d5acc3d5a25e8f1ffc5ab17

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

எலுமிச்சையில் வைட்டமின் சி வளமாக நிறைந்திருப்பதால், அவற்றை வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து பருகும் போது, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைப்பதோடு இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

main qimg a8b32ec2c51bc1c4a7a901b9038ce81b

நச்சுக்களை வெளியேற்றும்

முன்பே கூறியது போல எலுமிச்சையானது செரிமான பாதையில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்ற உதவுகிறது. அதே சமயம் அவை சிறுநீரின் அளவை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்றி சிறுநீரகத்தை ஆரோக்கியமாக செயல்படவும் வைக்கிறது. அதுமட்டுமின்றி, எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட், கல்லீரலில் உள்ள நொதிகளின் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது.

main qimg 5e4ee1224ddd10deefb847864076099e

குறிப்பு

எலுமிச்சையானது மிகவும் புளிப்பாக இருக்கும் என்பதால் அதனை நீருடன் சேர்த்து பருக வேண்டும். அதிலும் குளிர்ச்சியான நீரை விட வெதுவெதுப்பான நீரில் சேர்த்து பருகினால் தான் செரிமான மண்டலத்தில் எளிதில் இயக்க முடியும். அதுமட்டுமின்றி, காலையில் வெறும் வயிற்றில் பருகுவதால் மேலே குறிப்பிட்டுள்ள நன்மைகள் கிடைத்து எப்போதும் உடலானது புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

எச்சரிக்கை!

கிட்னியில் கல் உபாதை உள்ளவர்கள் சிட்ரிக் பழ வகைகளை தவிர்க்க வேண்டும். மருத்துவர் ஆலோசனை பெறுவது சிறப்பு..!

Back to top button
error: Content is protected !!