ஆன்மீகம்

நவமியில் குழந்தை பிறந்தால் நல்லதா?

அமாவாசை, பௌர்ணமி நாட்களுக்கு பிறகு வரும் எட்டாவது நாள் அஷ்டமி ஆகும். ஒன்பதாவது நாள் நவமி ஆகும். இந்த இரண்டு நாட்களிலும் பொதுவாக நம் முன்னோர்கள் நல்ல காரியங்களை செய்வதில்லை. அதற்கு என்ன காரணம் ? என்று பார்க்கலாம்

நவமி விளக்கம்

அஷ்டமி, நவமி நாட்களில் சூரியனின் சக்தியும், சந்திரனின் சக்தியும் பூமியை தங்கள் பக்கம் இழுப்பதால் ஒருவித அதிர்வு ஏற்படுகிறது. அந்த அதிர்வு பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் எதிரொலிக்கும். பேருந்தில் நாம் பயணம் செய்யும்போது நம்மால் சரியாக எழுத முடிவதில்லை அல்லவா? அதைப்போன்று, எந்த ஜீவராசியாலும் ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாது. அவ்வேளைகளில் நாம் எடுக்கும் முடிவும் நிலையற்றதாக இருக்கும். நவமி கழிந்த பிறகே பூமி தனது இயல்பு நிலைக்கு திரும்பும். அப்போதுதான் மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகள் மனமும் நிலை பெரும். அதனால் அஷ்டமி அன்றும், நவமி நவநாழிகை வரை எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் முடிவெடுத்தார்கள்.

பிறப்பின் நிலை

குழந்தை பிறப்பு என்பது மனிதர்கள் கையில் இல்லை. இது இறைவனின் செயல். எனவே குழந்தை பிறப்பு எந்த நாளாகவும், கிழமையாகவும் இருக்கலாம்.

சிலர் சுப நாட்களான புதன், வியாழன், வெள்ளி போன்ற நாட்களில் பிறக்க வேண்டும் என்று விருப்புவர். திதி ஒருவரின் பிறப்பை நிர்ணயம் செய்யாது.

திதி, கிழமை, நட்சத்திரம், யோகம், கர்ணம் இவைகள் அனைத்தும் சார்ந்துதான் ஒருவரின் பிறப்பின் நிலைகளை அறிய முடியும்.

மனிதர்கள் கையில்

ஒரு காரியத்தில் முடிவெடுப்பதற்கே, காரணங்கள் பார்க்கும்போது குழந்தை பிறப்பதற்கும் ஆராயமலா இருந்தார்கள்? மனிதனின் பிறப்பும், இறப்பும் மனிதர்கள் கையில் கிடையாது. அப்படியிருக்க, அதையும்மீறி நடக்கும் செயலுக்கு என்ன செய்வது?

குழந்தை பிறப்பு என்பது ஒரு இயற்கை நிகழ்வு. இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அதுமட்டுமல்லாமல் தாயின் ஆரோக்கியமும் காக்கப்படும்.

எந்த நாட்களில்

நவமி என்பது 9-வது திதி. 9-ஆம் எண்ணில் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நவமி மிகவும் விசேஷமானதாக இருக்கும்.

இது செவ்வாயுடைய ஆதிக்கம் உள்ள திதி. அதனால் செவ்வாயினுடைய மேஷ ராசி, விருச்சிக ராசியில் பிறந்தவர்களும் நவமியில் எது வேண்டுமானாலும் செய்யலாம்.

எப்படி இருப்பார்கள்

கிருஷ்ண பரமாத்மா அஷ்டமி அன்று பிறந்ததால் ஒரு மிகப்பெரிய போரை நடத்த வேண்டி இருந்தது. ஸ்ரீ ராமன் நவமி அன்று பிறந்ததால் அவரது வாழ்வில் 14 வருடம் காட்டில் கழிக்க வேண்டி இருந்தது.

இதன் மூலமாக தெரிவது என்னவென்றால் அஷ்டமி, நவமியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் கஷ்டத்தை சந்தித்தாலும், பிரகாசமான வாழ்க்கை கிடைப்பது நிச்சயம்.

இதையும் படிங்க:  இன்றைய ராசிபலன் (19-09-2021)

பரிகாரம்

நவமியில் பிறந்தவர்கள் நவமியன்று பலகரங்கள், குறைந்தது 8 கரங்கள் கொண்ட பெண் தெய்வத்தை வணங்க வேண்டும்.

எழுமிச்சபழத்தில் தாமரை திரி, விளக்கெண்ணை கொண்டு 9 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: