தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தீவிரமாகிறதா?

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக, சுகாதாரத்துறை செயலாளருடன், தலைமைச் செயலாளர் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா வைரஸ் 2-வது அலையின் தாக்‍கம் நாளுக்‍கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் கொரோனா வைரசால் 7 ஆயிரத்து 819 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக, ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துவிட்டனர். அடுத்த சில நாட்களில் இதன் தாக்‍கம் மேலும் அதிகரிக்‍கும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து, சுகாதாரத்துறை செயலாளருடன், தலைமைச் செயலாளர் திரு. ராஜீவ் ரஞ்சன், நாளை ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்‍டர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை இயக்குநர் திரு. செல்வவிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதையும் படிங்க:  வறுமையும் கஷ்டமும் உங்கள் நிலை வாசலுக்குள் காலடி எடுத்து வைக்கவே பயந்து நடுங்கும்.. இந்த 2 தீபங்களை உங்கள் நிலை வாசல் படியில் இப்படி ஏற்றி வைத்தால் போதும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: