பொழுதுபோக்கு

இரும்புச் சத்து நிறைந்த முருங்கைக்காய் வறுவல்!

முருங்கைக்காயில் நாம் இப்போது ஆரோக்கியம் நிறைந்த வறுவல் ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

முருங்கைக்காய்- 2
வெங்காயம் – 1
தக்காளி – 1
பூண்டு – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

முருங்கைக்காய், வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டினை நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.

அடுத்து வெங்காயம், தக்காளி, பூண்டு, முருங்கைக்காய் போட்டு வதக்கவும்.

அடுத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு இறக்கினால் முருங்கைக்காய் வறுவல் ரெடி!!


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  நலமான வாழ்விற்கு நவதானிய சூப்!
Back to top button
error: