விளையாட்டு

#IPL2021: மும்பை vs டெல்லி அணிகள் இன்று மோதல்.. வெல்லப்போவது யார்?

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி சென்னை மைதானத்தில் நடைபெறுகிறது.

மும்பை vs டெல்லி:

நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் தான் விளையாடிய 3 போட்டியில் 2ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் நான்காவது இடத்தில் உள்ளது. அதேபோல் டெல்லி அணியும் 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று ரன் ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இரு அணிகளிலும் பல அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர்.

resized image Promo 2021 04 17T232610.703 1024x576 1

மும்பை அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சமபலத்துடன் காணப்படுகிறது. அதேபோல் மும்பை அணி குறைந்த ரன்களை பதிவு செய்தாலும் எதிரணியினரை தனது அசத்தலான பவுலிங் மூலம் சுருட்டி விடுகின்றனர். எனவே இந்த அணி பேட்டிங்கில் கொஞ்சம் கவனம் செலுத்தி மிக பெரிய ஸ்கோரை பதிவு செய்தால் இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெறுவது எளிதான விஷயம்.

 

அதே சமயம் டெல்லி அணியும் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது. அந்த அணியின் கேப்டன் ரிஷாப் சூழ்நிலைகளுக்கு ஏற்பது போல் பேட்டிங் மற்றும் பவுலிங்கை மாற்றி அமைத்தால் டெல்லி அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DC vs MI

இரு அணிகளும் இதுவரை 28 முறை மோதியுள்ளனர். அதில் மும்பை அணி அதிகபட்சமாக 16 முறையும் டெல்லி அணி 12 முறையும் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. இரு அணிகளிலும் பல அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளதால் இந்த போட்டியில் பவுண்டரி மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இரு சமபலம் வாய்ந்த அணிகள் விளையாடுவதால் இந்த போட்டி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:  சிறு வயது முதல் ஆர்வம்.. ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ச்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: