விளையாட்டு

#IPL2021 மும்பை, ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை! வெல்லப்போவது யார்?..

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி சென்னை மைதானத்தில் நடைபெறுகிறது.

நடப்பு சாம்பியன் என்று அந்தஸ்துடன் இந்த தொடரில் களமிறங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. இதுவரை இந்த அணி இந்த தொடரில் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் 1ல் வெற்றி மற்றும் 1ல் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் தனது மூன்றாவது போட்டியை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. இந்த அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் மிக்க பலம் வாய்ந்த அணியாக காணப்படுகிறது.

03 10 2020 mipti 20829428

ஆனால் இந்த தொடரில் ஹர்டிக், பொல்லார்ட், இஷான் கிஷன் போன்றவர்கள் இன்னும் தங்களது அதிரடியை வெளிப்படுத்தாதது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்கிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் மும்பை அணி தனது வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்த அணியின் பவுலர்கள் அனைவரும் செம பார்மில் உள்ளனர். கடந்த போட்டியில் மும்பை வெற்றி பெற்றதற்கு மும்பை அணியின் பந்துவீச்சாளர்களே காரணம்.

sunrisers wicket celebration 1599395966

அதேபோல் ஐதராபாத் அணியும் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் உலக தரம் வாய்ந்த வீரர்களை அணியில் வைத்துள்ளனர். ஆனால் முதல் இரண்டு போட்டியில் நட்சத்திர ஆட்டக்காரரான கேன் வில்லியம்சனை அணியில் சேர்க்காதது அனைவரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொடரில் இந்த அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. எனவே இந்த போட்டியில் வெற்றியடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது ஐதராபாத் அணி.

54a12 16185814979168 800

இரு அணிகளும் இதுவரை 16 முறை மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 8 முறை தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளன. இரு அணிகளும் சம பலம் வாய்ந்த அணிகள் என்பதால் இந்த போட்டி கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முதல் வெற்றிக்கு ஐதராபாத் அணியும் தொடர் வெற்றிக்கு மும்பை அணியும் போராடுவதால் இந்த போட்டி மிக கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: