விளையாட்டு

#IPL2021 டெல்லி vs ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்.. வெல்லப்போவது யார்?..

இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பல பரீட்சை நடத்தவுள்ளனர். இந்த போட்டி இன்று இரவு மும்பை மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தியாவில் 14வது ஐபிஎல் தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் காயத்தினால் அவதிப்பட்டு வருவதால் இந்த ஐபிஎல் தொடரின் டெல்லி அணி கேப்டனாக ரிஷாப் பாண்ட் பொறுப்பேற்றுள்ளார். இவர் அந்த அணியை மிக அருமையாக வழிநடத்தி வருகிறார். மேலும் இந்த அணி தொடரின் தனது முதல் போட்டியிலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது.

ac73135d2656d8d5c36aca8285d427a1

என்னதான் ஷ்ரேயஸ் அணியில் இல்லை என்றாலும் அவரது இழப்பு அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமையவில்லை. காரணம் தற்போது அந்த அணியில் தவான், ப்ரித்வி, ரிஷாப், ஹெட்மேயர், ஸ்டோனிஸ் போன்ற பல அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர். முதல் போட்டியில் தவானின் அதிரடி ஆட்டம் அனைவருக்கும் நினைவிருக்கும். இந்நிலையில் இந்த போட்டியிலும் தனது வெற்றியை மிக எளிதாக டெல்லி அணி பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயத்தில் இந்த தொடரின் மூலம் ராஜஸ்தான் அணிக்கு கேப்டன் பதவியை ஏற்றுள்ளார் சஞ்சு சாம்சன். இவரும் தனது அணியை மிக சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இந்த அணி தனது முதல் போட்டியில் பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது. ஆனால் அது வீழ்ச்சி என்று சொல்ல முடியாது காரணம் கேப்டனாக பதவி ஏற்ற தனது முதல் போட்டியிலே சஞ்சு சதம் அடித்து சாதனை படைத்தார். மேலும் அந்த அணி சேசிங்கில் 200 ரன்னை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த அணி தற்போது சற்று பலவீனமாக காணப்படுகிறது.

rr vs dc cricket today

காரணம் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர், ஆல் ரவுண்டர் ஸ்டோக்ஸ் போன்ற முக்கிய வீரர்கள் காயத்தினால் விலகியுள்ளார். இதனால் இந்த அணி சற்று தடுமாற்றத்தை கண்டுள்ளது. இருந்தாலும் சஞ்சு பல மாற்றங்களை ஏற்படுத்தி சிறப்பான அணியுடன் இன்று களமிறங்குவர் என்று எதிர்பார்க்கப்டுகிறது. இந்த இரு அணிகளும் இதுவரை 22 முறை மோதியுள்ளனர். அதில் இரு அணியும் தலா 11முறை தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளது. இரு சமபலம் வாய்ந்த அணிகள் மோதவுள்ளதால் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:  வீரர்களை குறிவைக்கும் கொரோனா.. ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: