விளையாட்டு

#IPL2021 ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் இன்று பலப்பரீட்சை..!

இந்தியாவில் தற்போது 14வது ஐபிஎல் தொடர் மிக சிறப்பாக தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. அதில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியாவில் கடந்த 9ம் தேதி முதல் 14வது ஐபிஎல் தொடர் தொடங்கியது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதுவரை இந்த இரு அணிகளும் நேருக்குநேர் 21 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் அணி 12 முறை தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.

பஞ்சாப் அணி 9 முறை மட்டுமே தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் கெயிலை பஞ்சாப் அணி ஒளித்து வைத்திருந்தது. பின்பு பாதி தொடருக்கு பின்பு கெயில் களமிறங்கினார். ராகுல் மற்றும் கெயில் பார்ட்னர்ஷிப்பில் பஞ்சாப் அணி அசத்தியது அனைவருக்கும் நினைவு இருக்கும். இவர்கள் தற்போது செம பார்மில் உள்ளனர்.

149242 kimnqmvwln 1602784991

கடந்த ஆண்டு சிறுசிறு தவறினால் மட்டுமே கோப்பையை நழுவவிட்ட பஞ்சாப் அணி இந்த முறை கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ளது. மேலும் இந்த அணியில் மலான், பூரான் போன்ற உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் உள்ளார்கள். அதேபோல் பந்துவீச்சில் அசத்த ரிச்சர்ட்ஸன், மெரிடித், ஷமி போன்ற வீரர்கள் உள்ளார்கள். எனவே இந்த அணி பேட்டிங் மற்றும் பௌலிங் என இரு வகையிலும் மிக வலிமையாக காணப்படுகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மூலம் ராஜஸ்தான் அணி கேப்டனாக களமிறங்குகிறார் சஞ்சு சாம்சன். இவர் போன வருட ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திருந்தார். இதன் காரணமாகவே தற்போது அணி நிர்வாகம் இவருக்கு கேப்டன் பதவியை கொடுத்திருக்கிது என்றே சொல்லலாம். இவரது கேப்டன்சியில் ராஜஸ்தான் அணி கோப்பையை வெல்ல கடுமையாக திட்டம் தீட்டுகிறது.

422vhu5o sanju

ராஜஸ்தான் அணியில் மில்லர், ஸ்டோக்ஸ், பட்லர் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர். மேலும் இந்த அணியில் குலதீப் யாதவ், ஆண்ட்ரீவ் டை, உனட்கட் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். எனவே இரு அணிகளும் அனைத்து விதத்திலும் சம பலத்தில் காண்பதால் இன்று எந்த அணி மிக சிறப்பாக செயல்படுகிறதோ அவர்களே வெற்றி பெறுவார்கள்.

இதையும் படிங்க:  கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: