விளையாட்டு

#IPL2021 மும்பை, கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை..!

இந்தியாவில் நடந்து வரும் ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை மைதானத்தில் நடைபெறுகிறது.

நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் இந்த ஐபிஎல் தொடரில் களமிறங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த அணி ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் போட்டியில் தோற்பது இயல்பான விஷயம். முதல் போட்டியில் தோற்றால் மட்டுமே இந்த அணி தொடர் முழுவதும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். தற்போது அதே போல் இந்த தொடருக்கான தனது முதல் போட்டியிலும் பெங்களூரு அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது.

மும்பை இந்தியன்ஸ் அந்த போட்டியில் தோற்றதற்கு ரசிகர்கள் அனைவரும் சந்தோசம் அடைந்தனர். காரணம் இந்த தொடரின் மீதமுள்ள போட்டியில் மும்பை அணி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதால் தான். அதற்கு தகுந்தாற் போல் அந்த அணியில் உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் உள்ளார்கள். ரசிகர்கள் கூறுவது போல் அந்த அணியில் கடப்பாரை பேட்டிங் உள்ளது. அதேபோல் பந்துவீச்சில் பும்ராஹ் மற்றும் பவுல்ட் உள்ளார்கள்.

fec9c501 kkr vs mi h2h

ஒருபுறம் மும்பை இப்படி வலிமையாக காணப்பட்டால் மறுபுறம் கொல்கத்தா அணி மும்பைக்கு சமபலம் வாய்ந்த அணியாக காட்சியளிக்கிறது. இந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ராணா செம பார்மில் உள்ளார். இதனை நாம் கடந்த போட்டியிலே பாத்திருப்போம். மேலும் அந்த அணியில் மோர்கன், தினேஷ் கார்த்திக், திற்பாதி, ரசல் உள்ளிட்டவர்கள் உள்ளனர். அதேபோல் பந்துவீச்சில் ப்ரஸித் கிருஷ்ணா, கம்மின்ஸ் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர். மேலும் கடந்த வெற்றி மூலம் ஐபிஎல் தொடரில் இந்த அணி தனது 100 வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

பொதுவாக கொல்கத்தா அணியுடன் போட்டி என்றாலே மும்பை கேப்டன் ரோஹித் தனது அதிரடியை வெளிப்படுத்துவார். எனவே இந்த போட்டியில் அவர் சிறப்பாக விளையாடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர் 27 போட்டிகளில் மோதியுள்ளனர். அதில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 21 முறை தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. 6 முறை மட்டுமே கொல்கத்தா அணி தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதையும் படிங்க:  #IPL 2021: ஹைதராபாத் அணிக்கு எதிராக மும்பை பேட்டிங்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: