விளையாட்டு

#IPL2021 CSK vs SRH.. வெற்றியை தொடருமா சென்னை சூப்பர் கிங்ஸ்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடைபெறுகிறது.

கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் இந்தியாவில் மிக சிறப்பாக ஐபிஎல் மெகா தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இந்த தொடரின் மூலம் கடந்த ஆண்டு இழந்த வாய்ப்பை திரும்ப பெற வேண்டும் என்ற நோக்கில் சென்னை அணி மிக சிறப்பாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சென்னை அணியில் அனைத்து வீரர்களும் செம பார்மில் இருந்து வருகின்றனர்.

148441 izfnzhdssj 1601568541

மேலும் அவர்களது ஆட்டமும் எதிரணியினரை மிரள வைத்து வருகிறது என்றே சொல்லலாம். காரணம், அந்த அளவிற்கு சென்னை அணி இந்த ஆண்டு மிக சிறப்பாக விளையாடி வருகிறது. எனவே இன்றைய போட்டியில் சென்னை அணி மிக எளிதாக தனது வெற்றியை பதிவு செய்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் தொடக்கத்தில் இருந்தே ஐதராபாத் அணி மிக சொதப்பலாக விளையாடி வருகிறது.

கடந்த முறை எலிமினேட்டர் சுற்று வரை வந்த ஐதராபாத் அணி இந்த முறை லீக் சுற்றிலேயே வெளியேறுவது போல் தெரிகிறது. எனவே இன்றைய போட்டியில் ஐதராபாத் அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் மிக சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே சென்னை அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

A70I1320

இதுவரை இரு அணியினரும் நேருக்கு நேர் 14 முறை மோதியுள்ளன. அதில் சென்னை அணி அதிகபட்சமாக 10 முறை தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளது. ஐதராபாத் அணி 4 முறை மட்டுமே தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. இரு அணிகளுக்கும் வெற்றி முக்கியம் என்பதால் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: