விளையாட்டு

#IPL2021: சென்னை vs ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்.. வெற்றி யாருக்கு?..

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

கடந்த தொடரில் சொதப்பிய சென்னை அணி இந்த தொடரின் இரண்டாவது போட்டி மூலம் தனது கம்பேக்கை கொடுத்து ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. இந்த அணியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் உலக தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். ஆனால் அந்த வீரர்களின் செயல்பாடு சில போட்டிகளில் சிறப்பாக இல்லாததால் தான் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. ஆனால் நடந்து முடிந்த கடைசி போட்டியில் சென்னை அணியின் பவுலிங் மிக பிரமிப்பாக இருந்தது.

dreammainnew 1618721874

சென்னை அணியின் தீபக் சாகர் தனது வேகத்தினால் எதிரணியை திணறடித்து 4 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். எனவே இன்றைய போட்டியிலும் சென்னை அணி எதிரணிக்கு நெருக்கடி அதிகமான அளவில் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணியை போல் தனது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து இரண்டாவது போட்டியில் வெற்றியை பதிவு செய்துள்ளது ராஜஸ்தான் அணி. இந்த அணியின் புதிய கேப்டன் சஞ்சு மிக அருமையாக அணியை வழி நடத்துகிறார்.

1618755594 rr news

இந்த தொடரில் ராஜஸ்தான் அணி மிக்க வலிமை வாய்ந்த அணியாக காணப்படுகிறது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பல அதிரடி வீரர்கள் அணியில் உள்ளனர். எனவே இந்த போட்டி மிக கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இதுவரை மொத்தம் 23 முறை மோதியுள்ளனர். அதில் 9 முறை ராஜஸ்தான் அணியும் 14 முறை சென்னை அணியும் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. இரு அணியும் இரண்டாவது வெற்றிக்காக மோதுவதால் இந்த போட்டியில் மிக பெரிய ஸ்கோரை இரு அணிகளும் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:  #IPL2021 PBKS vs SRH: டாஸ் வென்ற ராகுல்.. பஞ்சாப் பேட்டிங்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: