ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் ஹைதரபாத் அணிகள் மோதவுள்ளன.
மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது. ஹைதராபாத் அணி தொடர்ச்சியாக கடந்த இரு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடர் தோல்வியை தடுப்பதோடு பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது. 8 புள்ளிகளுடன் 7 ஆவது இடத்தில் உள்ள டெல்லி அணி அனைத்து போட்டிகளிலும் அதிக ரன்ரேட் அடிப்படையில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. இதனால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh