ஐபிஎல் 2021.. இந்த மூன்று வீரர்கள் ஏலத்தில் எடுக்க வாய்ப்பே இல்லையாம்! யார் யார் தெரியுமா?
இந்தாண்டு நடைபெற இருக்கும் 14-வது ஐபிஎல் தொடரில், ஏலத்தில் எடுக்க வாய்ப்பே இல்லாத மூன்று வீரர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், நம் இந்தியாவில் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதையடுத்து 2021-ஆம் ஆண்டிற்கான ஏலம், வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது.
தொடரில் ஏப்ரல், மே மாதங்கள் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ஏலத்தின் போது ஒரு சில குறிபிட்ட வீரர்களை எடுக்க, ஐபிஎல் அணிகளிடையே கடுமையான மோதல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒரு மூன்று வீரர்களை எந்த ஒரு ஐபிஎல் அணியும் எடுக்காது என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய கிறிஸ் மோரிஸ், மேற்கிந்திய தீவு அணி வீரரான செல்டன் காட்ரேல்(கடந்த ஆண்டு பஞ்சாப் அணியால் 8 கோடிக்கு மேல் வாங்கப்பட்டவர்), இந்திய வீரரான கீதர் ஜாதவ்(கடந்த சில ஆண்டுகளாக சென்னை அணிக்கு விளையாடி வந்தவர்) ஆகியோரை எந்த அணியும் எடுக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், பெங்களூரு அணிக்காக எடுக்கப்பட்ட கிரிஸ் மோரிஸ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த கடந்த ஐபிஎல் தொடருக்கு பின் உடல் தகுதி இல்லாததால் எந்த போட்டிகளிலும் பங்கு பெறவில்லை. இப்போது அவர் அந்தளவிற்கு பார்மில் இல்லை, இவரை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு வீரர்கள் வந்துவிட்டனர்.
அதே போன்று கடந்த ஆண்டு இவர் 8.5 கோடி செலவில் வாங்கப்பட்ட செல்டன் காட்ரேல், கடந்த ஆண்டு மோசமான பந்துவீச்சு காரணமாக தற்போது அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட இருக்கிறார். இதனால் இந்த ஆண்டு மினி ஏலத்தில் எந்த அணியும் இவரை தெரிவு செய்யாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவதாக கீதர் ஜாதவ, இவர் கடந்த ஆண்டு சென்னை ரசிகர்கள் பலரின் வெறுப்பை சம்பாதித்தார், இவர் எல்லாம் டி20 தொடருக்கே சரியில்லாதவர் என்ற விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.