தமிழ்நாடு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை மெட்ரோ நிலையங்களில் ‘இது’ அறிமுகம்..!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கொரோனா பரவலை தடுக்க கழிப்பறைகளில் உள்ள தண்ணீர் குழாய்களை கைகளை உபயோகிக்காமல் காலால் தொட்டு இயக்கும் பொத்தான்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாட்டையே கதிகலங்க செய்த கொரோனா வைரஸால் மக்கள் வீடுகளில் முடங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் பொது போக்குவரத்து முடங்கியது.

அந்த வகையில் பேருந்துகள், ரயில்கள், ஆட்டோக்கள், கார்கள் என அனைத்து விதமான போக்குவரத்துக்கும் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஊரடங்கு காலத்தில் அவசர தேவைகளுக்கு மட்டும் வாடகை ஆட்டோக்கள் மற்றும் கார்கள் இயங்கின.

கொரோனா கட்டுக்குள் வந்ததை அடுத்து தமிழக அரசு பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் மீண்டும் சென்னை மெட்ரோ ரயில்கள் இயங்க ஆரம்பித்துள்ளன.

இதனால் சென்னை மெட்ரோ ரயில் சார்பில் கொரோனா பரவலை தடுக்க சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள கழிப்பறைகளில் இருக்கும் தண்ணீர் குழாய்களை கைகளை உபயோகிக்காமல் காலால் தொட்டு இயக்கும் பொத்தான்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: