உலகம்

ஆகா..! செம கண்டுபிடிப்பு ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் பேருந்து அறிமுகம்.. இரண்டே நிமிடத்தில் ரீசார்ஜ் செய்து பயணிக்கலாம்!!!

எஸ்டோனியா நாட்டில் டார்டு பல்கலைக்கழக மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட ஹைட்ரஜன் பேட்டரி மூலம் ஓட்டுநர் இல்லாமல் இயங்கக்கூடிய முதல் தானியங்கி மினி பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கக்கூடிய தானியங்கி கார், டெஸ்லா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. அது போல தற்போது ஒளவ் டெக் என்ற வாகன உற்பத்தி நிறுவனம் வடிவமைத்த மென்பொருள் மூலம் ஓட்டுநரின்றி இயங்கும் இந்த மினி பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துக்கு தேவையான ஹைட்ரஜன் பேட்டரி டார்டு பல்கலைக்கழக மாணவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Capture 12

இந்த மினி பேருந்தை இரண்டே நிமிடத்தில் ரீசார்ஜ் செய்து விடலாம். ஒரு சமயத்தில் இந்த மினி பேருந்தில் 6 பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. ரிமோட் மூலம் இயக்கப்படும் மினி பேருந்தை அறிமுகப்படுத்திய எஸ்டோனிய அதிபர் கெர்ஸ்டி கல்ஜுலைட் முதல் பயணியாக இந்த மினி பேருந்தில் பயணம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: