தொழில்நுட்பம்

WhatsApp செயலியில் புதிய அம்சம் அறிமுகம்!!

வாட்ஸ்அப் செயலியில் வரும் செய்திகளில் நீங்கள் முக்கியமாக கருதுபவைகளை ஸ்டார் செய்திகள் என்ற ஆப்ஷனின் மூலம் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இந்த அம்சம் எப்படி செயல்படுகிறது, அவற்றை எப்படி அணுகுவது போன்ற விவரங்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உலகளாவில் உள்ள மக்கள் அதிகம் பேர் பயன்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான தகவல் தொடர்பு செயலி என்றால் அது வாட்ஸ்அப் தான். இந்த செயலி உருவாக்கப்பட்ட காலம் துவங்கி இன்று வரை மக்களின் பேவரைட்டாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் சுமார் 400 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் இந்த வாட்ஸ்அப் செயலியை உபயோகப்படுத்தி வருகின்றனர். பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப், தனது பயனர்களின் முக்கியமான செய்திகளை சேமித்து வைக்க ஒரு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வரும் ஸ்டார் மெசேஜ்கள் மூலம் குறிப்பிட்ட செய்திகளை பயனர்கள் புக்மார்க் செய்து கொள்ள அனுமதிக்கிறது. இதன் மூலம் அந்த மெசேஜ்களை நாம் எப்போது வேண்டுமானாலும் எளிதாக பார்க்க முடியும். இப்போது வாட்ஸ்அப் செயலியில் ஸ்டார் மெசேஜ்கள் அம்சம் எப்படி செயல்படுகிறது என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 • அந்த வகையில் முதலாவதாக, புக்மார்க் செய்து வைக்க விரும்பும் வாட்ஸ்அப் சேட்டை திறந்து, குறிப்பிட்ட மெசேஜை லாங் ப்ரஸ் செய்யவும்.
 • இப்போது அது செலக்ட் ஆகும்.
 • பின்னர் அந்த சேட் பக்கத்தின் மேல் இருக்கும் ஸ்டார் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
 • இப்போது அந்த மெசேஜ், ஸ்டார் மெசேஜ்கள் என்ற அம்சத்தில் சேமித்து வைக்கப்படும்.

இனி சேமித்த அந்த செய்திகளை பார்பதற்கு;

 • வாட்ஸ்அப் சேட் பக்கத்தை திறக்கவும்.
 • அதின் வலது பக்கத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.
 • இப்போது அதில் நிறைய ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.
 • அதில் நமக்கு தேவையான ஸ்டார் மெசேஜ் என்பதை மட்டும் கிளிக் செய்தால் நீங்கள் சேமித்து வைத்துள்ள செய்திகள் தோன்றும்.
 • இனி ஸ்டார் செய்து வைத்த மெசேஜ்களை தேவையில்லை என்றாலும் அந்த பக்கத்தில் இருந்து நீக்கிவிடலாம்.
 • அதற்காக மேலே குறிப்பிடப்பட்ட படிகளை வரிசையாக பின்பற்றவும்.
 • இப்போது டெலீட் செய்ய வேண்டிய மெசேஜ் மீது லாங் ப்ரஸ் செய்யவும்.
 • பிறகு அன்ஸ்டார் என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் அந்த மெசேஜ், ஸ்டார் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விடும்.
  ஆனால் சேட் பக்கத்தில் அந்த மெசேஜ்களை நீங்கள் கண்டுகொள்ளலாம்.
 • இது தவிர மொத்த சேட் பக்கத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட செய்திகளை பார்க்க விரும்பினால், search என்ற ஆப்ஷனை பயன்படுத்தலாம்.
 • அதாவது தேடல் ஆப்ஷனில் உங்களுக்கு தேவையான செய்தியை டைப் செய்வதின் மூலம் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.
இதையும் படிங்க:  மன அழுத்தத்தைக் கண்டறியும் ஆப்பிள் போன்..!

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: