உலகம்

International Youth Day | இன்று உலக இளைஞர் தினம் (ஆகஸ்ட் 12)

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற சர்வதேச இளைஞர் தினம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 12-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச இளைஞர் தினம் “இளமையும், உளவியியல் சுகாதாரமும்” என்ற தொனிப்பொருளில் மனநல விடயங்கள் சார்பில் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச ரீதியில் 15 – 24 வயதிற்கு இடைப்பட்ட இளைஞர்கள் 1.2 பில்லியன் எண்ணிக்கையில் உள்ளனர். இன்றை இளைஞர்கள் நாளைய தலைவர்கள் அவ்வாறே இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப, நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. ஆனபோதிலும் சுமார் 20 சதவீதமான இளைஞர்கள் ஒவ்வொரு வருடமும் மன உளைச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.

நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது. தீர்மானங்களை மேற்கொள்ளல், பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்தல், போன்றவற்றில் அவர்களின் பங்கு இன்றியமையாதது. எனவே இத்தகைய வலிமை படைத்த இளைஞர்களை போதை போன்ற தீயவழிகளுக்கு அடி பணியவிடாது, ஒவ்வொரு அரசும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்த வலியுறுத்தும் விதமாகவே ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 12-ஆம் நாள் உலக இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இதையும் படிங்க:  முதன் முதலாக மானுக்கும் கொரோனா..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: