தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது – இணை இயக்குனர் சுற்றறிக்கை!!!

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் வழங்கும் புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுக்கு 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இணையதளம் மூலம் அக்டோபர் 15ம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் அறிவியல் அறிவை வளர்க்கும் நோக்கில் பல்வேறு செயல்பாடுகள் பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இவற்றில் மாணவர்கள் தொடர்ந்து கவனம் செலுத்த அறிவியல் பாட ஆசிரியர்கள் அவர்களை ஊக்குவிக்கின்றனர். பாட புத்தகங்களை தாண்டி அறிவியல் ஆய்வை மேற்கொள்ள அவர்களை தூண்டும் வகையில் பல்வேறு நேரடி அறிவியல் கண்காட்சிகளை பள்ளிகளில் நடத்துகின்றனர். இதில் பங்கு கொண்டு சிறப்பாக செய்முறைகள் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

விஞ்ஞான் பிரசார் நிறுவனம் மற்றும் விபா நிறுவனம் இணைந்து தேசிய அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு தேர்வை ஆண்டுதோறும் நடத்துகின்றன. இந்த தேர்வின் முக்கிய குறிக்கோள் மாணவர்களை அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவது ஆகும். இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் 6 முதல் 10 வகுப்பு வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் திறமை மிக்க மாணவர்களை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் ‘இன்ஸ்பயர்’ விருது வழங்குகிறது.

இது குறித்து பள்ளி கல்வி இயக்குனர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் 2021 – 2022ம் கல்வி ஆண்டில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ‘இன்ஸ்பயர் அவார்ட்ஸ் மானக்’ விருதுக்கு விண்ணப்பிக்கும் வகையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் தக்க அறிவுரைகளை வழங்க வேண்டும். மேலும் விருது பெற www.inspireawards-dst.gov.in என்ற இணையதளம் மூலம் 15.10.2021 அன்று வரை விண்ணப்பிக்கலாம் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் திறப்பு – சுழற்சி முறையில் வகுப்புகள்!!
Back to top button
error: