தமிழ்நாடு

அரசு பேருந்துகளில் புதுமை – பொதுமக்கள் வரவேற்பு!!

தமிழக அரசின் போக்குவரத்து துறையின் கீழ் செயல்படும் அனைத்து பேருந்துகளிலும் திருக்குறளுடன் விளக்க உரையும் அடங்கிய பலகைகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொது போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் ஜூலை 5ஆம் தேதிக்கு பின்னர் மாவட்டங்களுக்கு இடையே அனைத்து பேருந்துகளும் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் உள்ள 19 ஆயிரத்து 700 பேருந்துகளில், 14ஆயிரத்து 215 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

மற்ற மாநிலங்களுக்கு செல்லும் 2ஆயிரத்து 100 பேருந்துகள் தற்போது வரை இயக்கப்படாமல் உள்ளது.மேலும் கொரோனா பரவல் காரணமாக அனைத்து பேருந்துகளிலும் 50 சதவிகித இருக்கைகளுடன் பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பேருந்துகளில் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், கொரோனா வழிமுறைகளை பின்பற்றி பயணம் செய்து வருகின்றனர்.

மேலும் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் அனைத்து நகர பேருந்துகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணம் செய்யலாம் என உத்தரவிடப்பட்டது. மேலும் முன்னதாக கலைஞர் ஆட்சியில் அனைத்து பேருந்துகளிலும் திருக்குறள் பலகை வைக்க உத்தரவிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது. பின்னர் ஆட்சி மாறுதல் காரணமாக அவை பராமரிக்காமல் விடப்பட்டது. தற்போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அனைத்து பேருந்துகளிலும் திருக்குறள் மற்றும் அதன் விளக்க பலகை பொறுத்த உத்தரவிட்டார்.

அதன்படி தற்போது அனைத்து பேருந்துகளிலும் திருக்குறள் பலகையை டிரைவர் சீட்டுக்கு அருகில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மக்கள் விருப்பத்துடன் பார்த்து பயணம் செய்கிறார்கள். இந்த பணி அடுத்த 10 நாட்களுக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேருந்துகளில் பயணம் செய்யும் போது நேரத்தை வீணடிக்காமல் திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை தெரிந்து கொள்ள இது உதவியாக உள்ளது என பயணம் செய்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: