வேலைவாய்ப்பு

ஆரம்ப ஊதியம் ரூ.56,900/- தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு!!

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் (TIIC) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Manager, Senior Officer ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

நிறுவனம் – TIIC
பணியின் பெயர் – Manager & Senior Officer
பணியிடங்கள் – 50
கடைசி தேதி – 15.08.2021 – 14.09.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் :

TIIC கழகத்தில் Manager, Senior Officer பணிகளுக்கு என 50 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Manager (Finance) – 04 பணியிடங்கள்
Manager (Legal) – 02 பணியிடங்கள்
Senior Officer (Technical) – 08 பணியிடங்கள்
Senior Officer (Finance) 27 பணியிடங்கள்
Senior Officer (Legal) – 09 பணியிடங்கள்

வயது வரம்பு :

பதிவு செய்வோர் 01.07.2021 தேதியில் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30-43 வயதிற்கு இடைப்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • Manager – CA/ ICWA/ Post graduate/ MBA/ M.A./M.Sc/ M.Com/ Degree in Law தேர்ச்சியுடன் பணியில் 5-7 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Senior Officer – B.E/ B.Tech/ AMIE/ B.L. Degree/ CA/ ICWA/ Post graduate/ MBA/ M.A./M.Sc/ M.Com தேர்ச்சியுடன் பணியில் 1-3 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,500/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். அது குறித்த தகவல்களை அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

தேர்வு விவரங்கள் :

ஆன்லைனில் நடத்தப்படும் இந்த தேர்வுகள் முழுவதுமாக ஆங்கிலத்திலேயே நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகள் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மையங்களில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு கட்டணம் :

  • BC, MBC, MBC&DNC, General & DAP விண்ணப்பதாரர்கள் – ரூ.1,000/-
  • SC, SCA, ST விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் படைத்தோர் 15.08.2021 அன்று முதல் 14.09.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இதையும் படிங்க:  IOCL நிறுவனத்தில் 480 அப்ரண்டிஸ் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

Official PDF Notification – https://www.tiic.org/wp-content/uploads/2021/08/TIIC_Website-Notification.pdf

Apply Online – https://ibpsonline.ibps.in/tiiclmsfeb21/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: