சினிமா

மான்ஸ்டர் எப்போது வருவார்? ‘கேஜிஎஃப்’ இயக்குநர் தகவல்..!

இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கன்னட ஹீரோ யாஷ் நடிப்பில் 2018ல் வெளியான படம் கேஜிஎப்.

இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளிலும் வெளியாகி வசூல் ரீதியாகவும் வெற்றிவாகை சூடியது.

பாகுபலி படத்திற்கு பிறகு இரண்டாவது பாகத்திற்காக மக்கள் காத்திருக்கும் படம் ‘கேஜிஎப்’.

“10 பேரை அடித்து டான் ஆனவன் இல்லடா நான் அடிச்ச 10 பேருமே டான் தான்” போன்ற பன்ச் டயலாக்குகள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் வரும் அம்மா செண்டிமெண்ட் பாடலும் பலரது ரிங்டோனாக மாறியது.

இந்நிலையில், கேஜிஎப் சாப்டர் 2 எப்போது வெளியாகும் என ஐந்து மொழி ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். முன்னதாக இப்படத்தின் 2ம் பாகம் ஜூலை 16ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா 2ம் அலையின் உக்கிரம் ஜூலையில் தணியுமா என்பது குறித்து தெளிவான பதில் கிடைக்காததால், படத்தின் வெளியீட்டை தசராவுக்கு ஒத்திவைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையில் தசரா பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 15ம் தேதி படத்தை வெளியிடுவது என தீர்மானித்துள்ளனர் எனவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட படக்குழுவினர் தயங்குகின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தற்போது படக்குழு வெளியிட்டுள்ள பதிவில், “கேங்ஸ்டர்ஸ் நிறைந்திருக்கும் போது தான் ‘மான்ஸ்டர்’ வருவார். மான்ஸ்டரின் வருகை தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.

இதனால் பலரும் ‘கேஜிஎப் 2’ படம் விரைவில் தியேட்டரில் வெளியாகவுள்ளது என கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: