தமிழ்நாடு

6 முதல் 8ம் வகுப்பு வரை அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பு? வெளியான தகவல்!!

தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க முதல்வர் முக ஸ்டாலினிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. வகுப்புகள் ஆன்லைன் வாயிலாகவும் அரசின் கல்வி தொலைக்காட்சி மூலமும் நடைபெற்றது. இந்த நிலையில் கொரோனா முதல் அலை சற்று குறைந்த போது மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றது. பொதுத்த்தேர்வு நெருங்கும் நிலையில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்த காரணத்தால் மீண்டும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

தற்போது 5 மாதங்களுக்கு பிறகு செப்டம்பர் 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது அவர்கள் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து தமிழக முதல்வரிடம் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கையில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மருத்துவ வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதல்வர் முடிவெடுப்பார் என்றும் மாணவர்களை பள்ளிக்கு வரும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  மின்சார வாரியத்தில் வேலை – மோசடியில் ஈடுபட்ட தலைமை செயலக ஊழியர் கைது!!
Back to top button
error: