விளையாட்டு

#INDvsENG 2வது டெஸ்ட்.. சதமடித்த ரோஹித் சர்மா.. இந்தியா நிதான ஆட்டம்..

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை ஆரம்பித்த இந்திய அணியில் ஷூப்மன் கில், வீராட் கோலி டக் அவுட் ஆகினர். புஜ்ரா 21 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

முதலில் அதிரடி காட்டிய ரோஹித் சர்மாவும் 50 ரன்களை கடந்ததும், நிதானம் காட்ட தொடங்கி சென்சுரி அடித்தார். 149 பந்துகளை அவர் எதிர்கொண்டு 112 ரன்களை எடுத்துள்ளார். ரஹனா 31 ரன்களில் களத்தில் உள்ளார். இருவரும் நிதானமாக ஆடி வருகின்றனர். இந்திய அணி 47 ஓவரில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.

Back to top button
error: Content is protected !!